செவிலியர் என்றும் வாழ்கவே
![](https://eluthu.com/images/loading.gif)
கல்வெட்டுக் காலம் முதல்
கணிப்பொறி காலம் வரை
உள்ளத்தில் ஊற்றெடுக்கும்
உண்மை உணர்வு அன்பே !
தேவையே சேவை மனமும்
தேனினும் இனிய சொல்லும் !
சேர்ந்தே இருப்பதும் இன்றும்
சோர்விலா செவிலியர் என்றும் !
செவிலியர் பணியை பாரினில்
செவ்வனே ஆற்றிடும் எவரும்
தெளிந்த ஓடையின் நீர்போல
தென்றல் தந்திடும் சுகம்போல !
அன்னையின் அன்பிற்கு அடுத்து
அகிலத்தில் அன்பை பொழிபவர்
ஆறுதலை பாங்குடனே தருபவர்
ஆற்றிடும் நெஞ்சம் செவிலியரே !
பொறுமை காத்து கனிவுடனே
பொறுப்பாய் என்றும் பணிவுடனே
பொங்கிடும் இனபம் பெறுபவரே
பொழிவர் அன்பை செவிலியரே !
நேசம் நிறைந்திட்ட நெஞ்சங்கள்
நேரிய எண்ணமுடன் என்றுமே
தாயைப் போன்றே தளராமால்
தாங்கிடும் உள்ளங்கள் தாதிகளே !
செவிலியர் உள்ளமும் குளிர்ந்திட
குறையிலா வாழ்வினைப் பெற்றிட
வளமோடும் நலமோடும் வாழ்ந்திட
வாழ்த்துவோம் நாமும் உளமார !
பழனி குமார்