வாழவும் விடாது சாகவும் விடாது
காதல் செய்கிறது
என் மனம் கல்வி கூடத்தில்;
கருகி கொண்டிருக்கிறது
என் உடல் எரிகாட்டில்;
உடல் கருகவிட்டுச் சொன்னாள்
அவள் காதலை என்னிடத்தில்;
உயிர் பிழைத்து வந்தேன் அவளிடத்தில்;
அவளோ தூர விலகி ஓடி;
சாகவும் விடாது வாழவும் விடாது
எனை வாட்டிவதைத்தாள்.....