காதல் கடல்
இந்தக் கடலில் விழுந்தால் மட்டுமே
அழுக்கானவனும் அழகாகிறான்
சிடுமூஞ்சியும் சிரிக்க முயல்கிறான்
கருமியும் செலவாளியாகிறான்
சாதி வெறி பிடித்தவன் சாதியை வெறுக்கிறான்
இக்கடலுக்கு ஏழை,பணக்காரன் என்ற இனம் தெரியாது..
மனம் ஒன்றே போதுமானது....
இதில் சுனாமியும் உண்டு
சூறாவளியும் உண்டு
ஆம்! இக்காதல் கடலில் எவ்விரு மனங்கள்
மனதை படகாக்கி
காதலை துடுப்பாக்கி பயணம் மேற்கொள்கிறதோ?
அவ்விரு மனதிற்கு கரைகள் வெகு தூரமில்லை....
சுனாமியும் சூறாவளியும் சூழ்வதில்லை.........