அகத்துள் நுழைந்தவளே

முகப் புத்தக வழி
என் அகத்துள்
புதைந்தவளே .........
முகமறியா அறிமுகத்தில் ....
கணணி வழி
காதல் விதைத்தவளே ............




உன் நிஜமும்
நான் கண்டதில்லை
நிழலும் கண் கொண்டதில்லை ..........
எட்ட இருந்து
எனைக்
கொல்வதேன்?/
எங்கிருந்தோ ......




எனக்குள்
முளைத்த
முகப் புத்தக முல்லை நீ
கேட்டதில்லை ..
ஒரு பொழுதும்
உன் கிள்ளை
மொழி
இருந்தும்
ஒவ்வொரு நிமிடமும்
என்னுள் உன்
எதிரொலி .........





நீ யார் எவரோ?/ ......
எவர் மகளோ?/
வயதென்னவோ ?/....
இன மதமோ .......?/
உன் சம்மதமோ ......
இல்லை எனக்கொரு
பொருட்டு ......
என் இதயத் திருட்டுக்கு
நீ தான்
பொறுப்பு .........




உன் விழிகளில்
வீழவில்லை
வீழ்ந்தது உன் மொழியின்
அட்சரங்களில் ......
உன் கண்ணியம்
கண் கண்டதில்லை
நீ பதியும் கருத்துக்களில் ......
காண்கிறேன்
உன் கண்ணியத்தை .......
கிறங்கித் தொலையவில்லை
உன் எற்ற இறங்கங்களில்
தொலைகிறேன் ....
நீ பதியும்
முகப் புத்தக
பதிவேற்றங்களில் .......
கை விரல் மென்மைத்
தொட்டதில்லை
உன் மெல்லினத் தமிழினில்
உணர்கிறேன்
அதன் மென்மையை
இடையின் இனிமை
கை பட்டதில்லை
இடை இடை தோன்றும்
உன் இடையின எழுத்துக்களில்
மெய் உணர்கிறேன்
இடையின் இனிமையை .........
கண்டதில்லை
வல்லினம்
உன் மொழி வழக்கில் ......
இருந்தும்
தித்திக்குதே
உன் சொல்லினம் ........




உற்றதில்லை
உன் உருவம்
உனை
காண்கிறேன்
எழுத்துருவில்
அருவமான
ஆண்டவனைத்
தொழுவதில்லையோ?/
தொழுகிறேன்
உருவம் காணா
உன்னையும் .....
எனக்குள் தொடரும்
உயிர்க் காதலையும் .



இப்படிக்கு -

எழுதியவர் : கீதமன் (2-Apr-14, 2:34 pm)
பார்வை : 73

மேலே