யாரும் கேளாத காதல் ஈழத்து போர்ப்பறவைகளிடையே

பாரும் விரும்பாத சோகம்.
போரில் என் காதலனுக்கு.

வீரமகளாய் வீழ்ந்தேன்
போர்க்களமதிலே

சருகான
என் உடலோடு
ஊடலடா வந்த
கயவன்
கை முறித்து
கண் பறித்து
உயிர் பறித்த
காவலன்
அவன் தான்
என்
காதலன்

மறுகணத்திலிருந்து
எனக்கு மதிலாய் நின்று
வெறிகொண்டவர்கள்
சிரங்களை கொய்தெடுத்தான்
குருதி தெறிக்க

குருதி முகமெல்லாம்
சகதியாய்
கண்களில் மட்டும் வெள்ளி
அருவியாய்
காதலன்

தோட்டாக்கள் துரத்தி
குருதி சிந்தும்
மார்போடு
என்னை தூக்கும் தருணம்
விழிகுன்ற வீழ்ந்தான்
என் மார்பினிலே

என்றென்றும்
எனக்கு காவலனான காதலனாய்...

எழுதியவர் : ஜோன்ஸ் பாசில் (2-Apr-14, 9:57 pm)
சேர்த்தது : த.ஜோன்ஸ் பாசில்
பார்வை : 97

மேலே