கல்லூரி சாலை

கண்ணுக்குத் தெரியாத கனவொன்று
கத்தி சொல்லியதென் மனதில்
கன்னியவள் வருவாளென்று...!

நம்பவில்லை என் மனம்
நறுமுகையவள் முகம்பார்த்து நாளானதால்
நான்கொண்ட மயக்க மென்றிருந்தேன்...!

காத்திருந்தால் என் காதலி
கல்லூரி மரத்தடியில் – மனம்
துள்ளி குதித்தது மறுகணமே
கல்லூரிச்சாலை யெங்குமவள் நறுமணமே...!

எழுதியவர் : இரா.வீரா (3-Apr-14, 9:56 am)
சேர்த்தது : இரா வீரா
Tanglish : kalluuri saalai
பார்வை : 90

மேலே