ஞாயிறு வந்தாலென்ன

நாளும் கிழமையும்
வந்தாலென்ன....
ஞாயிறு தான் வந்தாலென்ன...?
விடுமுறை எங்களுக்கில்லை
தொழிலாளிக்கும் சட்டம் உண்டு
எங்களுக்கு ஏதும் இல்லை...
உழைப்பு உண்டு
ஊதியம் இல்லை....
நிர்வாகம் உண்டு
நிதி ஆதாரம் இல்லை....
சமையல் அறையே சிறை
விமோசனம் இல்லா
அகதிகளாய்...!
பரிகாசம் உண்டு
பாராட்டு இல்லை...
தனிமை பயம்
தொலைத்திடவே
தொலைக்காட்சி சீரியல்கள்
பூமியும் நாங்களும் ஒன்று
இருவருக்கும் ஒய்வு இல்லை...
கூட்டல் பெருக்கள் செய்யும்
ஆடிட்டர் நாங்கள்....
"துடைப்பத்தில் "மட்டும்
அதிகாரமில்லா ஜனாதிபதி
பதவி போல்
எங்களுக்கும் பதவி உண்டு
இல்லத்தரசியாம்...!
நாங்கள் சுமை தாங்கிகள்
குடும்பத்தார் கோபம்
தாங்கும் இடி தாங்கிகள்
அடுப்படியே கோயில்
ஆத்துக்காரனே தெய்வம்...!
எத்துனை பாரதி வந்தாலும்
வீட்டிற்கோர் அடிமையுண்டு...!
இத்தனைக்கும் இறுதியில்
சும்மா தானே இருக்க
சுட்டெறிக்கும் சுடு சொற்கள்

எழுதியவர் : சித்ரா ராஜ் (5-Apr-14, 10:55 am)
பார்வை : 277

மேலே