நான் மனிதன் அல்ல
சற்று நேரத்திற்கு முன்பு
பிரபஞ்சத்திற்கு வெளியே
அதிவேகமாக எறியப்பட்டேன்.
வலி உரைக்க
உயிர் உரக்க
சத்தமிட எத்தனித்தும்
சத்தமின்றி
துடிப்பின்றி
சலனமின்றி
அடங்கமுடியா விசனத்தில்
அடங்கிப்போனது என் சினம்.
சிங்கம் போன்று கர்ஜிக்க
ஆக்ரோஷப்பட்ட
என் பக்குவத்தின்
சினம், பயத்தின்
சின்னமாய் பரிமாற்றமடைய
என்னிடமிருந்து உயிர்
”உடல் ரத்து” செய்ய
விண்ணப்பம் கொடுத்து
மன்றாடி துடிக்கிறது.
கடைசி நிமிடம்
கடைசி நொடி
தீர்ப்பு எழுதி
எனக்கு விமோசனம்
தேடி உயிர் காத்து
தப்புதாளம் போட
நான் என்ன கடவுளா?
கடவுள்.....!!!!???
கடவுள்...!!!???
அடடா....! மனிதா..!
உனக்குதான்...
எத்தனை எத்தனை கடவுள்?
அத்தனை அத்தனை மதம்?
இத்தனை இத்தனை ஜாதிகள்.?
என்னைபோல
ஏதோ ஒரு
நல்ல மனநோயாளி
நல்ல நோக்கத்திற்காக
படைத்திருப்பானோ?
இந்த கடவுளையும்
கடவுளுக்காக மதத்தையும்..!
மதங்களுக்காக கிளைபரப்பிய
ஜாதியையும்..!
நான் ஏன் வீசப்பட்டேன்..! ?
மனிதம் ஏந்தி
முன்னோக்கி பயணித்தப்போது
பின்னோக்கி தள்ளி
பிணமாக்கி , நாசப்படுத்தி
என்னையும் மனிதத்தையும்
தூக்கி வீசி
எந்தன் நெத்தியில்
முட்டாள் பிறவியென்று
பழி அச்சு ஏற்றி
பகைமை அச்சமேற்றி
பிரபஞ்சத்தின் எல்லைவரை
துரத்தி வந்து
எட்டி உதைத்து
வீசியெறிந்தது
இந்த மனித இனமும்..!
இந்த கற்பனை விழிமியங்களும்..!
மனிதம் இல்லாதவன் மனிதன்..!
நான் மனிதன் அல்ல..!
-----------------------------------------------------------------------------இரா.சந்தோஷ் குமார்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
