முட்க்ரீடம் சூடிய மலர்கள்

பட்டம் முடித்த
பெண் வேண்டும்
கல்லூரி சென்றால்
"களவானி சிறுக்கி"
காதல் பாடம் பயில்கிறாள்

வேலை பார்க்கும் பெண்
வேளை வந்து
வீடு சேர்ந்தால்
"விபச்சாரி"

அன்று முதல்
அழகான பெண் வேண்டும்
அலங்கரித்தால்
"ஆட்டக்காரி"

மழலை வடிவில் மாது
மன்னன் மடியில் சாது
மணம் முடிந்து
மாதங்கள் கழிந்தால்
"மலடி"

சீதை குணம் கொண்டவள்
சிநேகம் கண்டாள்
சிரித்து மகிழ்ந்தால்
சிறிது நேரத்தில்
"பாஞ்சாலி"

சில்லறை போல்
சிரிக்கும் பெண்
சிலநாட்கள் கழித்து
ஸ்ரீதேவியும்
"மூதேவி"

காதலிக்கும் வரை
கற்புக்கரசி
காதல் கலைந்தால்
கனவிலும்
"காமஅரக்கி"

நாணம் கொண்டதால் பெண்
நாலு பிள்ளை பெற்ற பின்
"நாய்"க்கு எதற்கு
நாணம்

பெற்றதெல்லாம் ஆண் குழந்தை
பெண் குழந்தை வேண்டும்
பெற்றெடுத்தாள்
பெத்தவளும் வந்தவளும்
"பெரும் ஆசைகாரி"

தேநீர் கடை
தேவதையின் புன்முறுவல்
"தேவ.... "

தாலி கொண்ட தோழி
தாய் வீடு சென்றாள்
தங்கத்தாலி சீதனம் தராததால்
"தாசி மகள்"

முதிர்கன்னி
மாங்கல்யம் கண்டாள்
மாலைகள் வென்றாள்
மன்னன் மரித்தான்
மறுபடியும்
"விதவை"

இனியவள் பெண்தான்
இருந்தால்
"இச்சைக்கரசி"
இறந்தால்
"இம்சைக்கரசி"

இவையா
மலர்கள் கேட்ட
கிரீடங்கள் ....

மலர்களின் கழுத்தில்
மண்டையோட்டு மாலைகளா.....?

பூக்களின் மார்பில்
புலி நக கீறல்களா.....?

தாய்மைக்கு எதற்க்கப்பா
"தாசிப்பட்டம் "

உண்மைகளை உரக்க
உளறி இருக்கிறேன் ....

கேட்டதை சொல்லியிருக்கிறேன்
கேட்டதையெல்லாம் சொல்லவில்லை
கேட்காதவை ஏராளம் ......(பெண்கள் கவனத்திற்கு )


பாரதிக்கு இந்த
சாரதி சொல்லுவது
நீ கண்ட
புதுமை பெண்கள் -இந்த
புளுதிப்புயலிலேயே
அடித்துச் செல்லப்பட்டனர்
( மன்னிக்கவும் )
அடித்துக் கொல்லப்பட்டனர் .......

எழுதியவர் : தினேஷ் sparrow (5-Apr-14, 8:04 pm)
பார்வை : 174

மேலே