கொடுத்து தேய்ந்த கைகள்

"யோவ்...யோவ்....நில்லுயா... யாருய்யா நீ.... நீ பாட்டுக்கு திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழைஞ்சா மாதிரி போற....?"

"யோவ்...நான்தான்யா C.I.D. சிங்காரம்..அய்யாவ அவசரமா பாக்கணும்"

"அப்படியெல்லாம் பாக்க முடியாது....ஐயாவோட கார்ட் வச்சிருக்கியா.."

"யாருய்யா நீ....நேரங்காலம் தெரியாம..... அய்யாட்ட போயி 1947 வந்திருக்கேன்னு சொல்லு..."

*************************************
*****************************************
"உஸ்...அப்பப்பா....என்ன தலைவரே கெடுபிடியெல்லாம் ஓவரா இருக்கு..புதுசு புதுசா ஆட்கள சேர்த்து உள்ள வர்றதே பெரும்பாடா இருக்கு"

"என்ன செய்ய சொல்ற...தேர்தல் நேரம் அப்படித்தான்....ஏன்னா கட்சியில எவன் கெட்டவன்,எவன் கெட்டவனுக்கு கெட்டவன்,எவன் நல்லவனுக்கும் கெட்டவன்னு தெரியாது பாரு அதான்... கொஞ்சம் கெடுபிடி... சரி..சரி...போன காரியம் என்னாச்சு?"

"என்னா தலைவா...நம்மட்ட ஒரு வேலைய குடுத்தா அத முடிக்காம வருவேனா....? இந்தா தலைவா...நீ சொன்னா மாதிரியே அந்த வார்டுல நம்ம பசங்கள விட்டு...ஒரு வாரமா உழைச்சு...50 வீடுகள்ல அடிச்சது....எண்ணிப் பாத்துக்கோ..."

"அதிருக்கட்டும்...இந்தா உன் கமிஷன்.."

"நன்றி தலைவா...!ஒரே ஒரு சந்தேகம் தலைவா....குறிப்பா ஒவ்வொரு வாரமும்,இந்த வார்டுலதான் கொள்ளை அடிக்கனும்னு சொல்றீயே...அது ஏன் தலைவா?"

"அடேய்... ஒவ்வொரு வார்டுக்கும் ஓட்டு கேட்டு போகும்போது சும்மாவா போவாங்க...கட்டுகட்டா பணம் வேணும்...அதுக்கெல்லாம் எங்க போறது....இந்த மாதிரி ஏதாவது செஞ்சாத்தாண்டா....அதுமட்டுமில்லாம நான் பணம் குடுக்குற வார்டுலேயே...நீயும் கொள்ளை அடிச்சீன்னா மக்களுக்கு சந்தேகம் வந்திடும்...அதுக்குத்தான் வார்டை மாத்தி மாத்தி விடுறது புரிஞ்சதா....சரி..சரி...சொன்னத வெளியில வேற யார்கிட்டயும் உளறிடாத...புரியுதா?"

"தலைவா...நீ எங்கியோ போய்ட்ட தலைவா....!"

எழுதியவர் : உமர் ஷெரிப் (6-Apr-14, 11:05 am)
பார்வை : 214

சிறந்த நகைச்சுவைகள்

மேலே