உழவும் தொழிலும்

உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்தோம் அன்று!
பச்சை வயல் கண்டு
இச்சை அவள் கொண்டு
மாதம் மும்மாரி பொழிந்தாள்!
முப்போகம் விளை வித்து
சுகபோகம் அதில் கொண்டு
முற்றம் முழுதும் நிறைத்தான்!
வயல் வெளிகளில் தானுண்டு
கயல் விழிகளை ஆட்கொண்டு
காதல் கீதங்கள் படித்தான்!
நற்கேணி குளங்கள் வெட்டி
ஏற்றம் அதில் அமைத்து
சுற்றம் மொத்தம் பாய்த்தான்!
பஞ்ச காவ்ய உரமிட்டு
நஞ்சு சிறிது மின்றி
தினம் பேணி வளர்த்தான்!
நெற்கதிர்கள் ஓங்கி நிற்க
சொற்கதிர்கள் அவன் வடித்து
நற்கீதம் இசைத்தே அறுவடை செய்தான்!
கடுங் கால வெள்ளத்தில்
சில கள்ள உள்ளத்தால்
வயல்கள் இங்கே சொப்பனம் தான்
இன்று உழவுக்கும் தொழிலுக்கும் நிந்தனைதான்!