பாலைவனக்கப்பல்
உன்னோடு கூடியிருந்த
அந்த நாளில்
நான் சொகுசுக் கப்பல்
இன்று நீயின்றித் தளர்ந்த நாளில்
நானோர் பாலைவனக் கப்பல்
ஓராயிரம் சுமைகளைச் சுமந்து
முன்னும் பின்னும் அசைந்தாடி நான்
ஓர் முடிவில்லா பயணம் போகிறேன்
பழகப் பழக
சுமைகள் கூட இங்கே
சுகங்களாகிவிடுகின்றன
இறக்கி வைக்க இடமும் இல்லை
இறக்கி வைக்க மனமும் இல்லை
விந்தைதான்!
இந்த சுகங்களைச் சுமந்துகொண்டு
முன்னும் பின்னும் அசைந்தாடி ஓர்
முடிவில்லா பயணம் போகிறேன் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
