ராம நவமி வாழ்த்துக்கள்

மனவீணை மீட்டுகிறேன்
மன்னவனே தாலேலோ....!!
தோளிலே மாலையிட்டேன்
தூயவனே தாலேலோ....!!
உன்னை நினைத்து வாழ்கிறேன்
உத்தமனே தாலேலோ...!!
உயிரென்றே உனை துதிக்கிறேன்
உயர்ந்தவனே தாலேலோ...!!
தாய் தந்தை சொல் மதித்த
தயாளனே தாலேலோ.......!!
தன்னம்பிக்கை மனம் கொண்ட
தலைவனே தாலேலோ...!!
நட்பிற்கோர் இலக்கணமாய்
நடந்த இறையே தாலேலோ...!!
நயவஞ்சக சூழ்ச்சியிலும்
நலிவு பெறாய் தாலேலோ.....!!
நீதி நெறி தவறாத
நிஜ உலகே தாலேலோ.....!! என்
நிம்மதியின் உறைவிடமே
நீல வண்ணா தாலேலோ .....!!
கானகத்தில் இருந்து தனியே
கவிதைபாடி உனை நினைக்கிறேன்
கண்ணாளா இன்று ராம நவமி என்
கருத்தினிலே நிறைந்தவன் நீ....!!
எவர் சொல்லோ நீ கேட்டு
எனை நீயும் வனம் விட்டாய்.....
எழிலான மனம் படைத்தோய்
ஏன் இப்படி நீ செய்தாய்....?!
மாதவனுக்கும் மனித தோற்றம் வந்தால்
மாறக் கூடும் குணம் எனச் சொல்லவோ ?!
சரி விடு......
பொல்லாததையும் இல்லாததையும் பேசி
பொழுதைக் கழிக்க நான் இங்கு இல்லை
புரியுமா ஹே ராமா நானொரு
புதுமைப் பெண் இப்போது......!!
உனக்கு ஹேப்பி பெர்த் டே கிப்டாய்
உயர்தரமாய் ஒரு செல் போன்.....
முகத்தைப் பார்த்தபடியே பேசலாமாமே...
அதுதான் இது......
தயவு செய்து என் கால் வந்தால் அட்டெண்ட் பண்ணு.........
சூர்ப்பனகை மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இப்போது அழகாக இருக்கிறாள் என்று எனக்கொரு செய்தி..........
உன் போனில் என்கேஜ் டோன் வந்தால் - என்
உயிர் வலிக்கும் நானும் பெண்தானே மன்னவா...
சந்தேகம் உன் மீது இல்லை எனினும் தமிழ்
சரித்திரத்தை இந்த டிவி சீரியல்கள்
புரட்டிப் போடுவதால்.......
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.....
மிகுந்த குழப்பத்தில் இருந்தபடி
டிவி முன் அடிமைபோல் அமர்ந்து
இந்த SMS ஐ உனக்கு அனுப்புகிறேன் ராமா.....
என்னை கடைத்தேற்றி அருள்புரிவாய்
ஆண்டவனே..........
ஹேப்பி பெர்த் டே டூ யூ......!!