புற்றீசல் காதல்

பொது இடங்களில்
கூட்டம் போடும்
புது அரசியல்வாதிகள்
தொடங்கும்பொழுதே
கைக்கலப்பு தான்....

நட்பா காதலா என
வேடிக்கை பட்டிமன்றம்
நடத்தும் விவரமான
பேச்சாளர்கள் ....
இறுதியில்
நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்கிறார்கள் ...

பண்பாடு என்னும்
கட்டுப்பாட்டை
விரும்பாத இவர்கள்....
பொது இடங்களில் கழட்டிவிடுகிறார்கள்...

நிழல்களிலெல்லாம்
புற்றெழுப்பும்
கரையான் இவர்கள்...

சுகத்துக்காக
கவிப்படும்
சுயநலக் க(கா)விஞர்கள்...


புதருக்குள்
முளைக்கும்
புற்றீசல் இவர்கள்....
வாழ்வெல்லாம் ஒரே நாள் ....

எழுதியவர் : பார்வைதாசன் (8-Apr-14, 2:38 pm)
Tanglish : putreesal kaadhal
பார்வை : 86

மேலே