அன்றும் இன்றும்

அன்றும் இன்றும் !!
மார்கழி மாதக்குளிரில்
நான் இட்ட மாக்கோலம்
அதன் மத்தியில் வைத்த
பூசணிப்பூ!!!
ஹே! எந்த கோலம்
அழகு என்று
என்னுடன் போட்டி போடும்
என் எதிர் வீட்டுத்தோழி !!!
அக்கா எனக்கு கட்டுரைப்போட்டி
என என்னிடம் கட்டுரை எழுத
போட்டிடும் எங்கள்
தெரு சிறுவர்கள்!!
மின்சாரம் துண்டிக்கப்
பட்டவுடன் அனைவரும்
அமரும் என்
வாசற் படிக்கட்டு !!
மொட்டை மாடியில்
ஒன்றுகூடி நாங்கள்
பகிர்ந்து உண்ட
சித்தரா பௌர்ணமி நிலாச்சோறு !!
சொந்தங்கள் ஒன்று கூடி
ஆர்ப்பரித்த என் வீட்டு
சுகபோகம் !!
என எண்ணிலா நினைவுகள்
என்னுள் மேல்
எழும்புகின்றது
இன்று ……..
ஏனோ இந்நகர வாழ்கையில்
10 மணிக்கு விளித்து
பெட் காபி கேட்கும் நங்கைகள்…
என்றும் அழியாமல்
ஒட்டப்படும்
பிளாட் வாசல் ரங்கோலி
ஸ்டிக்கர்…
நெட் ஷர்பிங்ல் நிலைத்து
விட்ட இந்நகர சிறுவர்கள்..
அனைவரும் ஒன்று கூடும்
பேஸ்புக் குரூப்
கான்வர்சேசன் …
என்றோ ஒருநாள்
இங்குள்ள பெற்றோர்கள்
தன் பிள்ளைகளுடன்
அமர்ந்து உண்ணும்
பிட்சா ஹட் …
ஸ்கைப்பில் காட்டப்படும்
உறவினர் வீட்டு திருமணம்
விஞ்ஞானத்தின் வளர்ச்சியால்
வீழ்ந்தன நம் மலர்ச்சிகள்..
அறிந்தும் ஏனோ
வலித்த புன்னகை
ஒன்றை மெலிதாய்
உதிர்த்து விட்டு நானும்
கிளம்புகின்றேன்
அவசரமாய் என் அலுவலகத்திற்கு !!