முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
"என்னய்யா சொல்ற....? நேத்து சாயங்காலம் கூட தலைவரு நல்லாத்தானே இருந்தாரு...."
"பிரச்சினையே ராத்திரியிலதான......"
"அப்படி என்னய்யா பிரச்சினை....?"
"நைட் 10 மணிக்கு மேல வீடு வீடா பிரச்சாரம் பண்ணலாம்னு அறிவிப்பு வந்த உடனே, முதல் ஆளா யார்டயும் சொல்லாம 2 பேரை மட்டும் கூட்டிகிட்டு பிரச்சாரம் பண்ண போயிருக்காரு.... அந்த நேரம் பாத்து யாரோ ஒரு காவாலிப் பய அந்த வீட்ல இருந்து திருடிட்டு ஓடிருக்கான்...அந்த வீட்டு ஆட்கள் திருடன்...திருடன்...னு கத்திகிட்டு வெளிய வரவும்...கவர்ன்மெண்டு கரண்ட் கட் பண்ணவும்... இவர் போய் நிக்கவும் சரியா இருந்திருக்கு...."
"அடப்பாவமே....ம்ம்... அப்புறம்.....?!!"
"அப்புறம் என்ன..... அந்த வீட்டு ஆட்களோட சேர்த்து..தெருநாயும் துரத்த.....கடைசியில சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள....அடி பின்னி எடுத்துருக்கானுக....உசுரு பொழச்சதே பெரிய விஷயம்னா பாத்துக்கோயேன்.....ம்ம்...என்ன செய்ய எல்லாம் தலை விதி"