சாதி ஒழிக

எண்ணத்து எழு தீயும்
எழுதுகோல் மைத் தீயும்
எழுந்திங்கு எழும்பும்
எழுத்தென்ர எழும் தீ

எழுத்தென்று எழும் தீயில்
ஏடென்ர வெறுங்காடு
வெந்து வேர்விடும்
வேகாத புரட்சித் தீ

வேகாத புரட்சித் தீ
வேகம் அறியாது
வெந்து விறகாகும்
நொந்த அடிமைத் தீ

அடிமைத்தீ எரிந்தடங்க
மடமைத் தீ மரித்து விட
அடங்கி அழும்
அற்பர்களின் ஆணவத் தீ

ஆணவத் தீ முடங்கி விட
அறிவுத் தீ கொளுந்து விட
ஆடி அடங்கும்
ஆர்ப்பரிக்கும் கர்வத் தீ

கர்வத் தீ கலைந்து விட
காலத் தீ சுடர் விட
காலன் கை கால் பாதிக்கும்
கல்லறையுள் சாதித் தீ

எழுதியவர் : கீதமன் (9-Apr-14, 9:13 pm)
பார்வை : 126

மேலே