அனுபவ பாடம் 0தாரகை0

முட்கள்
--பாதுகாப்பிற்கே
----பாதிப்பிற்கு அல்ல!

வலிகள்
--உணர்வதற்கே
----உயிர்விடுவதற்கு அல்ல!

தோல்விகள்
--படிப்பினை பெறுவதற்கே
----படிப்பை விட்டுவிட அல்ல!

வெற்றி
--இன்று கை தவறி இருக்கலாம்
----என்றும் கைக் கெட்டாததல்ல!

வீழ்ச்சி
--விழுந்ததே தவிர
----எழ முடியாதொன்றல்ல!

மரணம்
--அடுத்த கட்டமே
----அழிவென்பதல்ல!

கடந்த காலம்
--இறந்த காலமோ
--இழந்த காலமோ அல்ல
--நம்மை வழிநடத்த
--எதிர் கால ஆசானின்
--கையில் இருக்கும்
--அனுபவ பாடம்!

எழுதியவர் : தாரகை (10-Apr-14, 7:12 pm)
பார்வை : 338

மேலே