ஆம்புலன்ஸ்

அபாய ஒலி
சங்கின் முழக்கமனாலும்
அசையாத சாலை வாகனங்கள்
மாறாத சாலை விதி முறைகள் .....
இனிய சேவை தான் எங்கள்
இலக்கம் என
இன் முகத்துடன் ஆம்புலன்ஸ்
இயக்குனர்கள் இனிதே உரைத்தாலும்
உயிரோடு போராடும் மனித
உடல்களின் மௌன வார்த்தைகள் ....
எங்களை அழைத்து செல்லும் இடம்
"மருத்துவமனையா??
மயானமா ???