கள்ளுள்ளம்

கல்லெறிந்து கூட்டை கலைக்கும்
களிப்புள்ளம் கொண்ட செந்தேசத்தில்
சிரிப்பும் சிலையாகி சீர்திருத்தம் பேசுதடா

இருக்கட்டும் றெக்கையுமென
இடமதில் சொருகி பயன்படா பொருளாய்
பரண்மேல் பவ்வியமாய் விரிகண்
ஓய்வின்றி இணையுடன் துணை காத்து

செந்நீறுடன் மதம் பேசி மயக்கமதை
மலடியாக்கி மரணித்தவனை
மறுதலித்து எழுப்பும் மாற்றுலக
கிருமிகளாம் மயங்கொலிப்பிழைகள்

சூட்சம சுதாரிப்புகள் சுருங்க புரிந்திடினும்
கந்தர்வலோக காட்சிகளால் சிதையுண்டு இதயமறுத்து பிரிந்திட திராணியற்று
படர்கொடிபோல் பயனின்றும் பற்றிக்கொண்டு

தெளிந்ததை தெரிந்திடாமல்
கலங்கிய கண்கொண்டு
தெளிந்திட காத்திராமல் ஏகவசனம் பேசி
எட்டிச்செல்வதால் யாருக்கொன்றுமில்லை

ஏர்பூட்டி எதார்த்தமாய் தெரிந்த நாம்
பார்கூட்டி பல்லிளிக்கும் பதறென்று
தெரியவிலையோ பரிதாப படைப்பில்
பழையதோர் உலகில் பைத்தியமாய் !!!

எழுதியவர் : bhanukl (10-Apr-14, 8:42 pm)
பார்வை : 137

மேலே