மறக்க முடியவில்லை

... '' மறக்க முடியவில்லை ""...
நினைக்க மறக்கவில்லை
மறந்தும் இருக்கவில்லை
உன்னோடுதான் என்றும்
நினைவோடுதான் இன்றும்
செல்ல சண்டையை
சின்ன கோபத்தை
வானத்தின் நிலவை
கண்சிமிட்டும் விண்மீனை
கோடைகால மழையை
வசந்தத்தின் தென்றலை
மார்கழி மாத பனியை
நந்தவன சுகந்தத்தை
அசைந்தாடும் தேரை
நினைக்க மறக்காதபோது
மறப்பதெப்படி சாத்தியம்
ஏனோ நீதான் என்னிடம்
கண்ணாமூச்சி ஆடுகிறாய்
வானம் பார்த்த பூமியான
எனை கோடை மேகமாய்
ஏமாற்ருவதுமேனோ அன்பே
இன்றும் என்றும் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..