அலைவரிசை

உறவுகளையும் மரபுகளையும்,
தாண்டிய தொடர்பு நமக்குள் !
உன் துணை இல்லாமல்போனால்,
உறுதியாய் தூங்கமுடிவதில்லை !
துணைக்கு வந்தாலும்,
உனக்கான பாதையில்,
பயணிக்கிற அழகுபார்த்தே,
படுத்துபுரள பழகிவிட்டேன் !
பிற்பாடு பிற்பாடு ...............
அயர்ந்தெழுந்து உயரம் பார்க்கையில்,
விடியலை விதைத்துவிட்டு நீ,
எங்கேயோ போயிருப்பது வழக்கம்,
எனதினிய வெண்ணிலவே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (10-Apr-14, 8:47 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 81

மேலே