ஒரு இயற்கை காட்சி -
காலையில் ஓர் காட்சி
-----------------------------
ஆதவன் குணதிசை வந்தடைந்தான்
கமலங்கள் ஆயிரம் மலர்ந்தன
தேன் வண்டு ரீங்காரம்
காதில் வந்து ஒலித்தன
வண்டுகள் கமலத் தண்டினைத் துளைத்து
மகரந்தம் நாடி சென்றன சேர்த்தன
பின்னே மேலெழுந்தன -அங்கே
மா மரங்களில் மந்திகள் கவிகளுடன்
மேலும் கீழும் தாவி தாவி விளையாடிட
உச்சியில் ஓர் தேன் கூடு
கவி அதன் கால் பட்டு தேன் சிந்த
கீழே மந்தி அதை அள்ளி பருகிட
அதைக் கண்ட கவியும்
மந்தியிடம் தேன் வேண்டி கெஞ்சிட
மறுத்த மந்தி மேலோர் கிளைக்கு தாவிட
சிந்திய தேனை மந்தி அது பருகிட
இயற்கை விரித்த கோலத்தை
அங்கு ஓரத்தில் நின்று பார்த்தேன்
பேர் ஆனந்தம் அடைந்தேன்