என் செய்வோம்

தலையாய் காஷ்மீர் கொண்டு
பூபாதமாய் குமரியும் உண்டு
கரமாய் வங்காளம் குஜராத்
குருதியாய் ஜீவநதிகள் ஓட
வளமாய் இருக்கும் நாடே ...!

மொழிகள் பல சேர்ந்து
இனங்கள் எல்லாம் இணைந்து
மதங்கள் ஒன்று கூடி
இளைஞர் தூனாய் நிற்க-உன்னை
உயர்த்தி நிறுத்த நினைத்தோம்.....!

நோயாய் அரசியல் மாற
தொற்றாய் ஊழல் பரவ
நாங்கள் என்செய்வோம் நாடே....!!!

எழுதியவர் : தமிழ் பிரியன் (12-Apr-14, 7:26 pm)
சேர்த்தது : ஹிட்லர்
Tanglish : en seivom
பார்வை : 151

மேலே