என் அக்கா
நீ தீவாக இருந்தால்
நான் கடலாக இருப்பேன்
நீ உடலாக இருந்தால்
நான் உயிராக இருப்பேன்
நீ விலங்காக இருந்தால்
நான் உனக்கு இரையாக இருப்பேன்
நீ கடவுளாக இருந்தால் நான்
உன் பக்தையாக இருப்பேன் .
நீ என்னைவிட்டுப் பிரியாமல் இருந்தால்
நான் மேலே எழுதிய அனைத்தும் சாத்தியமே !