வாழ்க்கையின் உண்மை
விதைகள் முளைக்க தண்ணீர் வேண்டும்
வாழ்க்கையில் முன்னேற சாதிக்க வேண்டும்
மெய்யால் நல்வாழ்க்கைக் கடலில் மூழ்கிவிடு
வாழ்க்கையின் உண்மையை நீ உணர்ந்துவிடு
உன் முயற்சிகள் தவறிப்போனாலும்
வாழ்க்கையை வெறுக்க நினையாதே
மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நீ
இனிமை நிறைந்த வாழ்க்கையை நழுவ விடாதே
சோதனைகள் பல உன்னை வீழ்த்தச் செய்தாலும்
உன் வாழ்க்கையின் உண்மையைத் தேடும் தேடல்
நின்றுவிடக் கூடாது .