பைந்தமிழும் காவலடி ----------சரோ

வஞ்சி உன்னை பாட
வண்டமிழுக்கு ஆசை !
கண்டேன் உன்னை நானே ! என்
கண்ணே வாயேன் நீயே !
கவிதைக்கு கருவாகி
கற்கண்டு இனிப்பாகும்
சொற்கொண்டு வடிக்கின்றேன்
நற்றமிழால் உன்னை வாவா !
அன்னமே ! வண்ணமே ! அழகு
எண்ணமே ! கோலமயிலே !
கொஞ்சுதமிழே ! உன்னை
மிஞ்சு தமிழால் பாடிட வாவா !
முத்தே !முழுநிலவே !என்
சொத்தே ! சுகம் விரியும்
சத்தே !சந்தனம் தோற்கும்
சங்கத் தமிழால் பாடிட வாவா ,
நூலறும் இடையில் என்மோக
நூலறுத்து இன்பமாம் நல்ல
மோககுளத்தில் நீந்தி என்
தாகம் தீர்க்க வாவா !
ஆசை எனக்குள் ஊறுதடி
அழகு தமிழும் மணக்குதடி !
அகம் நிறை பைங்கிளியே !
பைந்தமிழும் காவலடி உன்னை
பாடிட பூங்கொடியே வாவா !
சரோ