இப்படியும் சில மனிதர்கள்

புத்தி பல கூறிடுவார்!
புதுமை பல செய்திடுவார்!
புனை கதையும் யாத்திடுவார்!
பொதுப் பணி என்றழைத்தால்!
புற முதுகு காட்டிடுவார்!!

சீர் திருத்தம் பேசிடுவார்!
சினமின்றிக் கனிந்திடுவார்!
சிரம் தாழ்த்தியும் பணிந்திடுவார்!
தொண்டுக்காய் பணமென்றால்!
சீ..என்று விரட்டிடுவார்!!

இன் சொல் பேசிடுவார்!
இனங்கிப் பல உரைத்திடுவார்!
இகழ்வதையும் வெறுத்திடுவார்!
இல்லார்க்கு உதவி என்றால்!
ஏரெடுத்தும் பார்க்கமாட்டார்!!

வௌ்ளை உடை உடுத்திடுவார்!
விளம்பரங்கள் தேடிடுவார்!
வளம் பலவும் பெற்றிடுவார்!
வறுமை போக்க வாரும் என்றால்!
வெருண்டு தூர மறைந்திடுவார்!!

விருந்து பல சென்றிடுவார்!
விருப்பமாய் பல உண்டிடுவார்!
வாழ்த்தியும் வந்திடுவார்!
விருந்தொன்றை வேண்டிட்டால்!
வருந்தி அதை மறுத்திடுவார்!!

குடை பிடித்து வந்திடுவார்!
கோயில் குளம் சென்றிடுவார்!
கடவுளையும் பணிந்திடுவார்!
கொடை ஒன்றை செய்யும் என்றால்!
காட்டமாய் பேசிடுவார்!!

பொய்யுரைக்கக் கூடாதென்பார்!
புகழ் வேண்டிப் பேசிடுவார்!
பல பாடமும் புகட்டிடுவார்!
பந்த பாசம் என்றால்!
பச்சையாகப் பொய்யுரைப்பார்!!

தனக்குத் தனக்கென்றால்!
சுளகும் படக்குப் படக்கென்றுரைக்கும்!
இப்படியும் சில் மனிதர்கள்!
சுயநலமாய் சுதந்திரமாய்!
தந்திரமாய் தாழ்வாய் ........................!!

எழுதியவர் : ஜவ்ஹர் (12-Apr-14, 10:48 pm)
பார்வை : 224

மேலே