சொல்லப்பட்ட பொய்களும் சொல்லபடாத உண்மைகளும்
ஒரு பொண்ணோட 4 வித பரிமானத்தில் நடக்கும் ஒரு கதை தான் இது...
முதல் பரிமாணம் -குழந்தை
2- பள்ளி பருவம்
3- கல்லூரி பருவம்
4-----?
இது தான் கதை
அந்த பொண்ணுக்கு நல்ல குடும்பம் ,குடும்ப பின்னணி , ஆனால் பாசம் காட்ட தான் ஆளில்லை அந்த வீட்டுல... அப்பா அம்மாவுக்கு சண்ட ...அம்மா வீட்டுல இல்ல....
வீட்டுக்கு வரதே இல்லை ... வேல செய்ற இடத்திலேயே தங்கிடுறாங்க .... அவளை அவ அம்மா விட்டுட்டு போறப்போ அவளுக்கு வயசு 12....
7ம் வகுப்பு படிக்கும் போதே குடும்பத்துக்காக அரகுறைய சமைக்க ஆரம்பிக்கிறா..... அவளுக்கு 4 அண்ணன் 3 பேருக்கு கல்யாணம் ஆகிடுது....வர்ற அன்னின்களோட கொடுமைய பொறுமையா ஈத்குக்குரா...வயித்து சூடு... சூடு போட்ட வயித்துக்கு சோறு இல்ல... பணம் இருந்தும் அது அந்த அன்னிங்கலொட தேவைக்கு தான் ..கால்ல செருப்பு இல்ல போட்டுக்குற உடை மட்டுமில்லாம எல்லாரோடதாயும் சேது தொவைக்க வேண்டிய நிலைமை...ஆளுக்கு dress ல போனாலும் மனசெல்லாம் சொல்ல முடியாத சோகங்கள் ...10 வது படிக்கும் பொது பூபெய்துரா....ஆனால் அம்மா இல்லை பக்கதுல...அங்கயும் அண்ணியோட ராஜியம் ...அம்மா வந்துடுவானக்னு காத்துட்டு இருக்க வராமலே ஏமாந்து போகுது அந்த பிஞ்சு மனசு....அண்ணன்களுக்கும் கேட்க்க வாய்ப்பு அறுந்து போகுது...
அப்பா அண்ணன் கூட இருக்க அவளுக்கு 16 வயது....பொண்ணு சொல்லிக்கிற அளவுக்கு அழகு இல்லனாலும் குணத்துல சூப்பர் ....அப்டி இருக்கும் போது ஒருத்தவன் வரான்... அவனுக்கும் அவளுக்கும் எதிர்பாராத சந்திப்பு மனசுல அந்த வயசுக்கு உள்ள மௌனமான காதல்...
வீட்டுக்கு தெரியாம பேசுரா பழகுறா நட்பு-என்ற முகமூடிய பயன்படுத்தி...அவனும் எதுக்கு குறை வைக்காம நடந்துக்குரன்... feb -14 ஒரு வருட புரிதல்க்கு அப்புறம் காதல்க்கு பச்சக்கொடி காட்டுறாங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்துல...
அப்போ அப்போ மாட்டிக்கவும் செயிரா வீட்டுல...
அந்த பையனும் அவளோட சித்தப்பா பையனும் நண்பர்கள்... இத எப்டியோ தெரிஞ்சிக்கிட்ட அந்த அண்ணன் வீட்டுல சொல்ல அடுத்த நாள் அரசு பொது தேர்வுக்கு தயார் பண்ணிக்கிட்டு இருந்தவலுக்கு அதிர்ச்சி ... தன்னோட படிப்புக்காக காதல விடுறத பொய் சொல்லி பள்ளிக்கு போனவளுக்கு மனசுல வலி ...என்னதான் படிக்கிறவள இருந்தாலும் வெறும் 850 மார்க் தான் எடுக்க முடிஞ்சிது அவளால... அவளால அந்த பையன அதுக்கப்புறம் தொடர்புகொள்ள முடியல... கஷ்டப்பட்டு போராடி இன்ஜினியரிங் சேருறா ... கடவுள் கண்ணா திறக்ககூட பணம் வேணும்னு அந்த பிஞ்சு மனசுக்கு தெரியல... அவள் வாழ்க்கை பணம் இல்லாத நடைபினாம மாறுது....அவளுக்கு கல்லோரில கிடைத்த அறிமுகமோ 2 பேர்...ஒருத்தவன் அண்ணன் இன்னொருத்தவன் நண்பன்... இருவருக்கும் போராட்டம் யார் இவளிடம் பேசுவது என்று... காரணம் அவளுடைய குணம்,,,,, சுட்டித்தனமான பேச்சு...
நண்பனும் இவளும் காதலிப்பதாய் ஒரு கருது அண்ணனிடம் ....அவரகளுக்கு சண்டை உருமாறிய காட்டாறு... இதை பற்றி கல்லூரியே தவறாக பேசும் அளவுக்கு மாறிவிட்டது....
அனைத்தையும் விட்டு விட்டு படிக்க ஆரம்பித்தவளுக்கோ ஒரு நண்பனின் அறிமுகம்...நல்ல மனிதன் ...பழகிய வரைக்கும்...குறை சொல்ல முடியாத ஒரு குணம்... பழைய காதலனின் மறு அறிமுகம் தோழியின் வழியே மறுபடியும்ம்ம்ம் .....????. முடிவ நீங்களே சொல்லுங்க ///////////////கதையோட தலைப்ப பாத்துகோங்க////