என் காவலன் நீ
எனக்காய் கருத்தாய்!
எனைக் காத்தாய்!
விரைவாய் தேய்ந்தாய்!
எனைப் பிரிந்தாய்!
செருப்பாய் - என்
மனதில் உயர்ந்தாய்!!
நான் தேய்த்தால்!
அழுதாய் மௌனியாய்!
உனை அணிந்தால்!
அழகாய் சிறப்பாய் - என்
பாதம் அணைத்தாய்!
கல்லும் முள்ளும்!
உனைக் கொள்ளும்!
நெருப்பும் தணலும்!
உனை வெதுப்பும்!
எனை காக்கும் உனை!
மனம் நினைக்கும்!
புதிதாய் அழகாய்!
பெட்டியில் மதிப்பாய்!
அணிந்தால் குறைவாய்!
மதிப்பில் தாழ்வாய்!
எனக்காய் அடைந்தாய்!
காலில் பாதணி நீ !
கையில் ஆயுதம் நீ!
பெண்களின் காவலன் நீ!
நிழலாய் இருப்பவன் நீ!
நிறைவாய் உள்ளவன் நீ!
தரம் பல பெறுவாய்!
தரமானவர் உயர்வாய்!
தனித்துவம் காப்பாய்!
அணிந்தவர் தரமாய்!
திகழ்ந்திடச் செய்வாய்!
எனக்காய் உழைத்தாய்!
உதிரம் இழந்தாய்!
அழகில் குறைந்தாய்!
மதிப்பை இழந்தாய்!
மூலைக்குச் சொந்தமானாய்!