சித்திரை திங்கள் கவிதைகள் 01

சித்திரை திங்கள் கவிதைகள்
--------------------------------------------
அம்மாவுக்கு ஒரு கவிதை
--------------------------------------------
சித்திரை
தினம் வருகையில்
தாயே உன் நினைவு
சித்தத்தை
சிதறவைக்குறது.....!!!

சிறுவயதில் இருந்து
சித்திரை தினமன்று
சித்திரை தேவதையாய்
என் கண் முன் நின்ற தாயே
இன்றும் நிற்கிறாய்- என்
மனக்கண் முழுதும் மகனை
வாழ்த்திய வண்ணம்...!!!

கவலை இல்லை தாயே ..
அண்டத்தில் காலடி வைத்தால் ...
காலன் பறிப்பது வழமைதானே...
கண்ணீருடன் நான் இருந்தாலும்...
அண்டத்தை விட்டு நான் அகலும் ...
வரை என்னை நீ-தான் தாயே ...
காப்பாற்ற வேண்டும் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (14-Apr-14, 9:14 am)
பார்வை : 184

மேலே