அப்புவின் சந்தேகம் தொடர்
அப்புவின் சந்தேகம் .. தொடர்
அம்மா
என்னடா .. இன்னிக்கு காலையில் எழுந்ததுமே உனக்கு சந்தேகமா
இன்னிக்கு ஸ்கூல் லீவ்
அது தான் தெரியுமே
ஏன் லீவ் ன்னு தெரியுமா
தெரியும்.
சொல்லு பாப்போம்
இன்னிக்கு தமிழ் புத்தாண்டு. எல்லோரும் அதைக் கொண்டாடனும் ன்னு தான் லீவ் கொடுத்திருக்காங்க
அப்ப இன்னிக்கு தமிழ் பிறந்தனாளா
இல்லடா என் செல்லம். சித்திரை மாதம் முதல் தேதி. தமிழ் புத்தாண்டு. தமிழர்கள் எல்லோரும் கொண்டாடுவாங்க.
அப்போ ஜனவரி ஒன்னாந் தேதி புத்தாண்டு இல்லையா
அதுவும் புத்தாண்டு தான்.
ஜனவரி மாசம் தைப்பொங்கலும் புத்தாண்டா
ஆமாம்.
ஒரு வருசத்தில எத்தனை புத்தாண்டு வரும் அம்மா
உன்னோட இந்த வம்பை உன் அப்பாகிட்ட போயி சொல்லு. போடா ..