வளரும் கவிஞருக்கு வார்த்தை அவசியம்

இலக்கணஇலக்கியம்
பயின்றவன் கவிஞனல்ல
பிறர்க்கும் ஆர்வமூட்டி
ஆற்றலை வெளிக்கொணரச் செய்திடின்
அவனே கவிஞனேன்பேன்!

தடாகத் தாமரையானாலும்
தலைச் சூடிட முடியாது
இறைவன் பாதம் பணிந்தால் தானே
அதற்க்கும் சிறப்பு ...!!

அறிவுக்கண் திறந்திட வேண்டும்
தம்மறிவென மமதை கொண்ட
மதயானைக்கு மதிப்பேது
தலைக்கனம் ஏறி மிதித்திட வேண்டும்!

தரணியில் உன்பெயர் நிலைத்திட வேண்டும்
தாம் என்றோரெல்லாம்
மண்ணொடுமண்ணாய் மறைந்திட்ட
கதை படித்திட வேண்டும்!

தாம் படைப்பதெல்லாமும்
எல்லோர்க்கும் பிடித்திட வேண்டும்
என வேண்டுதல் தவறில்லை!
அதற்கேற்ற படைப்பா என சிந்திக்க வேண்டாமோ?

விமர்சனம் தவிர்த்திட விரும்பினால்
அவன் கவிஞனல்ல
கருத்துக்கு மதிப்பளித்து புரிந்திட நீ
உரை எழுது அதைவிடுத்து
மூக்கினில் முட்டிடும் வார்த்தை
கவிஞனுக்கு அதுவா அழகு!

அறிவிற்ச் சிறந்த ஔவையும்
உரைத்த வார்த்தை மறந்திடாதே
கற்றது கையளவு கல்லாதது உலகு
அரவணைத்துச் செல்லா உனக்கு
வாழ்வில் வசந்தமென்பது எங்ஙனம்?

ஆடை கிழிந்தால் முள் குத்தி மறைத்திடலாம்
நண்பு உடைந்தால் முள்ளால் ஒட்டுவாயோ
முள்ளால் தானே நட்பொடையும்
எந்தன் அனுபவம் தான்
உந்தன் வயதென மறந்தால்
உன் வாழ்க்கை பதிலுரைக்கும்!!

எழுதியவர் : கனகரத்தினம் (14-Apr-14, 12:40 pm)
பார்வை : 220

மேலே