என் அப்பா எவ்வள்ளவோ மேல்

நான் பெண்ணாய் பிறந்தபோது
என்னை காண வராத என் அப்பா!
பின்பு நாளாக நாளாக என்னுடன் நடை பயின்றாரே !
நான் ஆங்கிலத்தில் பேசும் போதும் அடடே என்று
அள்ளி அணைத்தாரே !
நான் ஆசிரியராகி பாடம் எடுக்கையில்
மரத்தடியில் மறைந்து நின்று மெய்சிலிர்தாரே !
பிரசவ வலியில் துடிக்கும் போது
என்னுடன் சேர்ந்து அழுதாரே!
அவரையா தவறாக நினைத்தேன்
ஆணாதிக்கம் பிடித்தவர் என்று !
அல்ல அல்ல இப்போது புரிந்தேன்
அடிக்கடி அடிஉதை கொடுத்து
வரதட்சணையின் பெயரில் வாழ்வை கெடுத்து பிறந்தவீட்டுக்கு போ என எட்டி உதைக்கும்
என் கணவனை விட
என் அப்பா எவ்வளவோ மேல் என்று !
நான் பிறந்த போதே
அறிந்தார் போலும்
என் அப்பா
எனது இந்த அடிமை வாழ்வை !

எழுதியவர் : (14-Apr-14, 3:54 pm)
Tanglish : en appa evalavo mel
பார்வை : 66

மேலே