காலத்தின் அருமை

""நெஞ்சுரம்"' இருந்தும் நேரத்தை எதிர்பார்த்து...
"""கல்வி"" கணை கையிலிருந்தும்
காலத்தை எதிர்பார்த்து.........
""சமபலம்"' இருந்தும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து....
""முயல்"" இனமாயிருந்து முயற்சிக்காமல்..
மண் சாலையில் மண்டியிட்டு புலம்பும்...
இன்றைய ""ஆமை"" இன இளைஞனனின்..
(இனத்தின் இடையில் நானும்)
""""அலும்பல்---புலம்பல்""""

""தென்றல்"" வரும் பாதையென்று
தெருவோரம் காத்திருந்தேன்...
""வெற்றி"" வரும் காலமென்று
வெகுநாளாய் காத்திருந்தேன்...
"'வலிமை "" வரும் பாதையினை
வரவேற்க்க காத்திருந்தேன்....
இதுவரை இவையேதும் வரவில்லை
ஏனென்றும் தெரியவில்லை...
என்னவென்றும் புரியவில்லை....
இமை கூட மூடவில்லை....
இதைவிட வேறு கொடுமையில்லை
இனியெனக்கு பொறுமையில்லை..
இதனை """இதயம்"" அறிந்ததால்
இறுதியாய் அதுவும் இயங்கவில்லை...


(உயிரற்ற-உடலுக்கு உலகம்
"""போர்த்திய""" அறிவுரை
இதற்காக ""நீ""எந்த முயற்சியும் செய்யவில்லை..
இறுதிவரை இதை நீ உணர வில்லை..."""")

எழுதியவர் : கவிஞர். நா.பிரகாஷ் (14-Apr-14, 11:21 pm)
சேர்த்தது : prakashna
Tanglish : kaalaththin arumai
பார்வை : 1411

மேலே