காதல் விதை
என்னுள் விதையாய் கவிதையை விதைத்தவள் நீ
என் இதயத்தின் கவிதையாய் வீற்றிருப்பவள் நீ
பெயரினை கவிதையாய் கொண்டவள் நீ
செயலினை கவிதையாய் செய்பவள் நீ
உன்னை கருப்பொருளாய் நினைப்பவன் நான்
உன்னை நேசிக்க பிறந்தவன் நான்
உன்னுள் உறைய விரும்பியவன் நான்
உன்னை கரம்பிடிக்க பிறந்தவன் நான்
உன்னை வரமாய் கடவுளிடம் பெற்றவன் நான்
உன்னை அறிந்த நான் என்னை அறிய மறந்தேன்