பெண்
அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு?!
என்ற காலம் மாறி
இன்று அடுக்கடுக்காய் வெற்றி கண்டு,
ஆகாயம் வரை பறக்கிறாள் பெண்..!
நீ விறகாய் இருக்கும் வரை,
நெருப்பாய் இருப்பாள்;
நீ மரமாய் இருந்தால், உன்னை
வேறாய் தாங்குவாள் பெண்..!
அடுப்பில் எறியும் விறகை கூட,
கனி தரும் மரமாய்
மாற்றும் சக்தி படைத்தவள் பெண்..!
உருவம் ஒன்றேயானாலும்.. அவள்
எடுக்கும் அவதாரங்கள் எத்தனை எத்தனையோ..!
கருவறை முதல்
கல்லறை வரை, உயிர் ஒன்றை தன்
கருவில், மார்பில், தோளில் சுகமாய் தாங்கும்
சுமைதாங்கி பெண்..!
தொல்லை என்று நீ தொலைத்த பின்னும் கூட
உன் கண்கள் அவளை தேடி உதிரம் சிந்தும்!!
பெண் இன்றி இப்புவியும் இல்லை..இப்புவியில்
அவள் இன்றி ஓர் அணுவும் இல்லை..!!