இயற்கை

வான்மழை பெய்யாமல் இருப்பதே - நாம்
மரங்களை அழிப்பதனால்...!!!
இயன்றதை இனிமேல் செய்வோமே-நாம்
மரங்களை வளர்ப்போமே...!!!
காட்டை அழிக்காதே,,,காட்டை அழிக்காதே
மனிதா நீ
நாட்டை காப்பாற்று,,,நாட்டை காப்பாற்று...!!!

காட்டை அழிக்கும் காட்டுமிராண்டி கூட்டம்
நம் நாட்டு மக்களிடையிலே...
மனிதர்கள் வாழ மரத்தை அழித்தான்
மாட்டிகொண்டான் மதயானையிடம்....

காட்டிலெங்கிலும் வீட்டு மனைகள்
நாட்டிலெங்கிலும் மிருகக்கூட்டங்கள்...!!!

காட்டுகுயிலின் சத்தம் காதுகளில் கேட்கலையோ,,,
கொஞ்சும் மைனாக்களின் குரலோவியம்
மனதில் நிற்கலையோ...!!!
நிறுத்துங்கள்,,,நிறுத்துங்கள் காட்டை அழிப்பதை
நிறுத்துங்கள்...!!!

காடுகளில் வாழும் பறவைகள் பாவம்,,,,
கோடரிமனிதா உன் கோவம் என்னவோ???
மரத்திடம் காட்டாதே உன் சுவாசம் போய்விடும்...!!!

பச்சைகிளிகள் கூட்டம் இந்த பச்சை மரத்திலே
நதிகளின் அருவி நடனமாடும் இந்த கானகத்திலே..!!!

தோம் தரிகட தத் தரிகிட தோம் தோம் தரிகட
தோம்ம்ம் ம்....

சங்கீத ஞானத்திலே சந்தன காடுகளில்
பல ஓசைகள் கேட்கும் பலவிதமாக...

எண்ணற்ற பறவைகளின் குரல்,,,
ஏழுஸ்வர்ணம் போலே இனிக்கும்...

இனி ஒரு விதி செய்வோம்
காடுகளை காப்போமே...!!!!

மாசுப்புகை மண்ணில் விளையாடுதே
காற்றுசுவாசம் பறிபோகுதே...

சுவாசத்தின் மரங்கள்-இன்று
வேரோடு அழியுதே...!!!

அழிக்காதே,,அழிக்காதே உன் உயிரை
நீயே அழிக்காதே....!!!!

புல்வெளி மீது பனித்துளிகள் இல்லை,,,
சிங்குமும்,கரடியும் நெடுஞ்சாலையில் சுற்றிவருகின்றன...///

"புலி பசித்தாலும் புல்லை தின்னாது"
மனிதனை தின்று விடும்...
மனிதா நீ மாறிவிடு மரங்களை,,காடுகளை வாழவிடு ...!!!

சூரியனும் சந்திரனும் இயற்கைக்கு அழகு சேர்க்கும்,,
நாம் நட்சத்திரமாய் அதற்கு துணையாய் நிற்போமே.!!!

இயற்கை தெய்வங்களே இம்மனிதரை மன்னித்துவிடுங்களேன்...

இயற்கையை கொண்டாடுவோம்,,,நாட்டை காப்போம்....
வாழ்க பாரதம் வளர்க பாரதம்
தாய்மண்ணே வணக்கம்............

இயற்கை கவிதைகள் இன்னும் தொடரும்
கவிஞர்:ச.நாக சங்கர கிருஷ்ணன்...

எழுதியவர் : கவிஞர்:ச.நாக சங்கர கிருஷ்ண (16-Apr-14, 1:33 pm)
Tanglish : iyarkai
பார்வை : 368

மேலே