தமிழ்த்தாய்க்கு புதிய அணிகலன்
தமிழன் என்று சொல்ல இனிக்கும்..
ஆனால் தமிழ் பேச கசக்கும்..
தமிழில் எழுத கைகள் தயங்கும்..
எழுத்துப் பிழைகளில் மானம் போகும்..
ஆங்கிலப் பேச்சு வாயெல்லாம் மணக்கும்..
ஆங்கிலப் பரிட்சை மதிப்பெண்கள் ஊரெல்லாம் நாரும்..
சுத்தத் தமிழ் நகைச்சுவை..
நுனி நாக்கு தமிழ் கரகோஷம்..
தமிழ் ரத்தம் உடலில் ஓடும்..
பெயர் பலகைகளில் தமிழ் ஓடி ஒளியும்..
ஆங்கிலப் பேப்பர் என்றால் புருவம் உயரும்..
தமிழ் பேப்பர் என்றால் புருவம் நெளியும்..
புரியாத ஆங்கிலப் பாடல்கள் உயர் ரகம்..
புரியும் தமிழ் பாடல்கள் மட்ட ரகம்..
வணக்கம் சொன்னால் அந்நியம்..
ஹாய் சொன்னால் அன்னியோன்யம்...
தாங்க்ஸ் சொல்ல விருப்பம்..
நன்றி சொல்ல தயக்கம்..
ஹிந்தி ப்ரென்சு தெரிந்தால் அருமை..
தமிழ் தெரியாவிட்டால் பெருமை..
தமிழ்த்தாய்க்கு இது அணிகலன் அல்ல..
விலங்கு.. அவிழ்க்கப்பட வேண்டிய விலங்கு..