கிராமத்துக் காதல்

இஞ்சருங்கோ என்னவரே!
இவ சொல்ரதையும் கேளுங்கோவேன்!
இஞ்சி போட்ட தேநீர் தாறேன்!
இருந்து குடிச்சிட்டு கிளம்புங்கோவேன்!!

வெரும் வயிராப் போகாமே!
வெந்து குடல் நோகாமே!
வருந்திப் பசியோட சாகாமே!
வந்து உண்டு போங்கோவேன்!!

வீட்டுக்க வர நேரமாகும்!
வேலையுமங்கே கனக்கேயாகும்!
வெட்ட வெயில் வெந்து விடும்!
வட்டக் குடை எடுத்துப் போங்க!!

மதியம் உண்ண என்ன வேணும்!
மடித்துச் சோறு எடுத்துத் தாறேன்!
மனங் கொண்டு உண்டிடுங்கோ!
மணம் மாற முன்னமேயே!!

பார்த்து வேலை செய்திடுங்கோ!
பரபரத்து செய்யாதைங்கோ!
புண் ஏதும் வந்து போகும்!
புரிந்து வேலை செய்திடுங்கோ!!

கடப்பேக்க நின்றிடுவேன்
காடு விட்டு வரும் வரைக்கும்!
கனக்க நேரம் சுனங்காமே!
கடுகதியாய் வந்திடுங்கோ!!

ஜவஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (16-Apr-14, 10:20 pm)
பார்வை : 99

மேலே