வாரிசுரிமை

மன்னராட்சியின் எச்சமோ
மடமையின் உச்சமோ
இன்றைய அரசியல்....
மன்னன் இருக்கையிலே
அவன் மகன் யுவராஜா
மன்னன் இறந்துவிட்டால்
அவன் மகனோ அடுத்த ராஜா
இன்றும் அப்படியே...
தலைவனுக்கு கொடிபிடிக்க
கோஷமிட... கொள்கை பரப்ப
போஸ்டர் ஒட்ட கூட்டம் சேர்க்க
தொண்டன் வேண்டும்
தலைவர் இருக்கையிலே
அவர் மகன் துணைத்தலைவர்
தலைவர் இறந்துவிட்டால்
மகனோ தானைதலைவர்
நாமிருக்கும் நாடு நமதுi
என்று உரக்க சொல்லிவிடாதீர்...
அரசியல்வாதியின் மகன் வந்து
அடித்துவிடப் போகிறார்
ஆட்சியும் கட்சியுமல்ல
நாடும் அவர்களுக்கே...

எழுதியவர் : சித்ரா ராஜ் (16-Apr-14, 10:41 pm)
பார்வை : 140

மேலே