அங்கீகாரம்
மனதை வளமாக்கும்
மனிதர்களின் அங்கீகாரம்
சாதனைகளை படைக்க வைக்கும்
சுய அங்கீகாரம்
உன்னதமான உயிரோட்டம்
உறவுகளின் அங்கீகாரம்
உண்மையான அன்னியோன்யம்
உணர்வுகளின் அங்கீகாரம்
நலிவடையும் போது
நட்பின் அங்கீகாரம்
பணிவு
பதவிக்கு அங்கீகாரம்
ஈகை
பணத்திற்கு அங்கீகாரம்
அங்கீகாரம் ....
மண்ணில் பிறந்திட்ட
அணைத்து மானுடர்களும்
மறைமுகமாய்
ரசித்து உண்ணும்
இனிப்பு
அளவுக்கு அதிகமான
அங்கீகாரம்
அகங்காரமாய் மாறி
காரமாகி விடும்.
மன வளர்ச்சியின்
மருந்தான
அங்கீகாரம்
எண்ணங்களில்
மறு மலர்ச்சியை ஏற்படுத்தும்
தட்டி கொடுப்போம்
தன்னம்பிக்கை எனும்
தளத்தை போட
பண்பான
பதவிசமான
அங்கீகாரத்தை
அளிப்போம்
ஆனந்தமாய் வாழ்வோம் ..