மனதின் முதல் ஏமாற்றம்

வாழ்க்கை பயணம்
சிறு சிறு கனவுகளுடன்..
அன்பை தேடியே
அடியெடுத்து வைத்தது...
மனதின் தாழ்மையில்
தனிமையை பழகியது..
பார்த்த முகத்தின்
வார்த்தையெல்லாம்..
பாசம் என்று நம்பும்
நாள்வரவே..
சட்டென்று மாறிய
நாள்பொழுதில்..
பாசத்தின் வேஷம்
சாயம் வெளுத்திட..
மரணத்தின் வலி உணர்ந்தே
மனம் தடுமாறிய முதல்வலி..
இன்றும் ரணமாய் வலிக்கிறது
மவுனமாய் மனதை குற்றுயிராக்கி..!
..கவிபாரதி..