பூவே நீ காத்திரு

பூவே, நீ பூத்தது போதும் காத்திரு!!

உன்னை விட,
என்னவனின் காதல் தான் உயர்ந்தது என்று
நீ நம்பும் வரை காத்திரு;

உன் அழகை விட,
என்னவனின் புன்னகை தான் அழகு என்று
நீ நம்பும் வரை காத்திரு;

உன் வாசத்தை விட,
என்னவனின் சுவாசமே சுகம் என்று
நீ உணரும் வரை காத்திரு;

உன் மென்மையை விட,
என்னவனின் தன்மையே சிறந்தது என்று
நீ நம்பும் வரை காத்திரு;

என்னவன்போல் இம்மண்ணில் உயர்ந்தவர்
எவருமில்லை என்று
நீ அறியும் வரை...........

பூவே நீ பூக்காமல் காத்திரு..!!

எழுதியவர் : சுதா ஆர் (18-Apr-14, 9:10 am)
Tanglish : poove nee kaathiru
பார்வை : 115

மேலே