என் காதல்
என்
கனவில் உதயமாகி
உறக்கத்தை கலைத்து .
கலைந்த தூக்கம்
மீண்டும் என்னை சேரும்
நேரத்தில்
அந்த ஊதகாத்தில்
புது உணர்வை ஊட்டினாய்.
யாரும் அற்ற
சாலையில்
பொடி நடை பயணத்தில்
விடியும் வரை
என் தனிமைக்கு
மௌனமாய்
கொள்ளியிட்டாய்.
உன்னை யார் என்ற
நினைப்பினில்
மனம் பரிதவிக்க
மெல்ல மெல்ல
உன் அடிமையக்கிவிட்டை
மீண்டும் உன்னை கனவில் தேடும் ஆசையில்
உறங்க நினைத்தால் உறக்கமில்லை
கனவுமில்லை ஆதலால்
நிம்மதில்லை.
என்ன செய்ய
என்ற போராட்டத்தில்
உடுப்பு உடுத்தி
உண்ண மனமின்றி
விரைந்தேன்
என் அலுவலக்கு.
அலுவலகத்தில்
இர்ருக்கையில்
அமர்ந்திருந்தும்
இல்லாமல்போன்னேன்
உன்னை தேடும் முயற்சிநிலே
அலுவலையும் மறந்தேன்
உன் நினைவால்
யார் நீ?
யார் நீ?
என்ற கேள்விகள்
என்னை தொலைக்க
ஏதும் அறிய
குழந்தையாய்
சேலைக்குள் புகுந்து
அவள் ரூபத்தில்
அருகினில்
அமர்ந்தது
என் காதல்...