+++உனை கண்டதும்+++

எதிர் எதிரே
சந்தித்தபோது நாணத்தால்
நீ தலை
குனிந்தாய்..............!

உணது விழிகளில்
எழுதும் வரிகள்
எனது பெயர்தானே.........!

எனக்குள்
கவிதைகள்
காவியமாய் விளைகிறது
உனை கண்டதும்..........!

எனை நீ பார்த்த
அத்தருணம்
மண்ணில் புதைந்த
சடலமானேன் நான்
உயிரோடு...........!

உனது
மௌனத்தை
ரசிக்கிறேன் தனிமையில்
சிரிக்கிறேன்...........!

எனை நீ
மெளனமாக நேசிக்க
உனை யாசிக்கிறேன்
உனது அருகிலே.........!

சுகமான தருணம்
உன் அருகிலே இருந்த
அந்த நாள்............!

உனது
மொழிகளை
சுவாசிக்க
எனது நினைவுகள்
ஏங்கி தவிக்கிறது
தினம் தினம்.............!

என்றும்
கண்டிடாத
மாற்றத்தை கண்டேன்
ஒருகணம்
உனது
விழிகளில்...........!

உனது
கால்களோ
தரையில் வட்டமிட்டது
தயங்கி
ஒடுங்கி நின்றது
சுவாசகமாக.............!

புரிந்து
கொண்டேன்
தெரிந்து கொண்டேன் '
அன்பே நீ என்னை
காதலிப்பதை.........!

எழுதியவர் : லெத்தீப் (18-Apr-14, 12:37 pm)
பார்வை : 101

மேலே