விரலிடும் கோலம்

வெளிச்சமான எதிர்காலத்தை
அந்தியிலே தேடும் கண்
கோடையிலே குளிருக்கு
ஏங்கும் மேனி
போவதறியா பாதைதேடி
வேகமாய் என் கால்
படித்தது இங்கேயானாலும்
ஆங்கிலத்தைச் சுவாசிக்கும் மனது
எல்லா வானொலிகளிலும்
காதல் பாட்டை எதிர்பார்க்கும் காது
எங்குசென்றாலும் காதல் வாடை
நுகரத்துடிக்கும் என் நாசி
அலையிலே அழிந்தாலும்
திரும்பத் திரும்ப என் கைவிரல் எழுதும்
உன் பெயர்க் கோலம்
எல்லாம் பலிக்கும் ஏக்கத்தில்
பலிகிடாவாய் நான்
-இப்படிக்கு முதல்பக்கம்




எழுதியவர் : கௌரிசங்கர் (26-Feb-11, 9:03 am)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 277

மேலே