வைகைப் பாலமும் வாழ்வும்

வைகையில்
ஓடும நீரால்
தளும்புகிற
மனம்

வைகைப்
பாலத்தைக்
கடந்து செல்லும்
பிணத்தால்
வெறுமை கொள்கிறது

குறளைத் திருப்புகிறேன்
நேற்றிருந்தார் இன்றில்லை
எனும் பெருமை
பெற்றதடா இவ்வுலகு
எனும் வள்ளுவரால்
உற்சாகம் கொள்ளும்
மனதோடு
கடந்து செல்கிறேன்
வைகைப் பாலத்தையும்
வாழ்வையும்

எழுதியவர் : (26-Feb-11, 8:17 am)
சேர்த்தது : வா. நேரு
பார்வை : 253

மேலே