மோகந்தனை எரிக்க வா ஏகம்பரனே-கார்த்திக்,நெல்லை

எட்டாத சில மௌனங்கள்
எய்தியது எனது நெஞ்சில்
பானங்களாய்
துள்ளி திரிந்திடும் கள்ளருந்திய
காட்டு குரங்காய் நெஞ்சை
நஞ்சாக்கி செல்கிறது

பாரமாய் அலைகிறது சில
சமயம் பற்றியும் கொள்கிறது
சில சமயம் விரட்டியும்
அடிக்கிறது !!!

சங்கடம் தீர்கிறதோ அல்லால்
சங்கடம் சேர்கிறதோ
ஆவது அறியாது ஒட்டியும்
ஒட்டாத தண்ணீரின்
எண்ணெய் போல
என்னை இங்கு
ஆட்கொண்டே அலைந்து
திரிகிறது !!!

ஓநாய்கள் கூட்டமொன்று
பிணம்திங்க சண்டையிடுவது
போலவே,உள்ளத்து
ஓநாய் கூட்டமொன்று
மோகந்திண்ண அலைகிறதே !!!

காலனுக்கு என்னை பரிசளிக்கும்
கடித்துக்குதறும் நாய்களை
அடித்துதுரத்தும் யோகன்தனை
கற்றுணர்ந்தும் கதறுகிறேன் !!!

உயர்வுநிலை எய்திடவே இப்பிறவி
எய்திங்கு வந்தனன் -இன்னுமொரு
இன்னுமொரு என்று இப்புவிதனில்
எத்தனைதான் நான் எடுக்க
பரந்தாமா !!!

பற்றுகளும் பந்தங்களும்
பாதியில் வந்ததென
அறிவுநிலையில் அமர்ந்து
ஆசானாய் அறிவுறுத்திய
அனைத்தும் இங்கு
வீணாகி வீர்யன்தனை இலக்கிறதே
வீரகேசவா !!!

இதுதான் விதிசெயலோ
என்வினை செயலோ
முன்வினை முடிச்சவிழ்த்து
பின்வினை பிடிச்சு பிசைந்து
என்வினை என்னை சுடாதபடி
காத்திருந்து கடைத்தேற்ற
கங்கணம் கட்டிகொண்டு என்னுள்
எழுந்தருள்வாய் ஏகனே !!!

விதியனைத்தும் செய்யலாம்
மரணவீதியையும் அமைக்கலாம்
மாயைகள பல காட்டி மயக்கலாம்
சொன்னதற்கு மேலாகவும்
சொல்லாததையும் சேர்த்து செய்யலாம்
இவையாவுக்கும் மேலாக
சத்தியஜோதியாய் உனைக்காண
உள்ளன்போடு நினைந்துருகும்

உள்ளபெருங்காட்டினிலே ஒரு
அக்னி சிறகோடு ஆவேசத்தவந்தனில்
ஆண்டாண்டு காலமாய்
ஆயிரம் பிறவிக்கு மேலாய்
ஆன்மபுறாவொன்று ஆற்றி
வரும்தவத்திற்கு மேலான
பரம்பொருளே நீயே சாட்சியாய் !!!

மாயகாட்சியை எரித்து
அகத்தினுள் ஆன்மகாட்சிதனை
தந்தருளி மோகத்தால் காயம்பட்ட
தேகத்தையும் சேர்த்து மனமெனும்
பெரும்காட்டினை அழிப்பாய்
தகதகவென எரியும் தீயினில்
கரும்புகை சூழாத ஆனந்த
அக்னிப்ரெவெசம் காணசெய்தருள்
என் கோவே !!!

மொத்தமும் எரிந்த காட்டினில்
எட்டும் மௌனமே நீயாய்
நீயே நானாய் எப்போது
சேர்வோம் ஏகம்பரனே ?????


அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (19-Apr-14, 7:12 pm)
பார்வை : 74

மேலே