கண்ணாடி

உலகம்
நீ சிரித்தால் சிரித்து
நீ அழுதாலும் கேலியாய் சிரிக்கும்
தந்திரக் கண்ணாடி

இல்லாத கொம்பு இருப்பதாய் காட்டும்
கல்லாதவனையும்
கருத்துச் சித்தனாய்க் காட்டும்
பொல்லாதவனையும்
பொலிவோடு புகழும்
நல்லவனும் வல்லவனும்
நடிப்பதாய் தெரியும்
உலகம் ஒரு தந்திரக் கண்ணாடிதான்!

துரோகங்கள்
தூய வெள்ளுடையில்
உலவுவதாய் படும்
மாறுமுகமூடி அணிந்துதான்
நல்லதும் பொல்லாததும்
நடந்து போகும்.
உலகம் ஒரு தந்திரக் கண்ணாடிதான் !

எழுதியவர் : நேத்ரா (20-Apr-14, 7:30 am)
Tanglish : kannadi
பார்வை : 87

மேலே